வாங்யீ தலைமையில் நடைபெற உள்ள சீனா-ஆப்பிரிக்கா இடையேயான கூட்டம்
2022-08-17 19:22:04

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 8ஆவது அமைச்சர்கள் கூட்டத்தின் சாதனையைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் ஆகஸ்டு 18ஆம் நாள் காணொளி வழியாக நடைபெற உள்ளது. சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இக்கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்த உள்ளார். செனகல், கின்சாசா காங்கோ, லிபியா, அங்கோலா, எத்தியோபியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 17ஆம் நாள் தெரிவித்தார்.