இஸ்ரேல்-துருக்கி தூதாண்மையுறவு மீட்சி
2022-08-18 16:03:46

துருக்கி அரசுத் தலைவர் மற்றும் வெளியுறவு அமைச்சருடன் இஸ்ரேல் தலைமை அமைச்சர், தொடர்பு கொண்ட பிறகு, இரு நாட்டு தூதாண்மையுறவை மீண்டும் தொடங்க இரு நாடுகள் தீர்மானித்துள்ளதாகவும், இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று தூதர்களை அனுப்ப உள்ளதாகவும் இஸ்ரேல் தலைமை அமைச்சர் அலுவலகம் 17ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

இஸ்ரேலுக்கான தூதரை நியமிக்க துருக்கி தீர்மானித்துள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் 17ஆம் நாள் கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சரை சந்தித்த போது தெரிவித்தார்.