அமெரிக்காவுக்கு ரஷியாவின் கோரிக்கை
2022-08-18 16:31:57

அமெரிக்காவுக்கான ரஷியத் தூதர் அன்டோனோவ் ஆகஸ்டு 17ஆம் நாள் “ரஷிய-24” என்னும் தொலைக்காட்சி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், ஐ.நா உள்ளிட்ட இடங்களில் பணி பயணம் மேற்கொண்டது குறித்து அமெரிக்கா ரஷியாவின் மீது தடைகளை விதித்து வருகிறது. 77வது ஐ.நா பொது பேரவை கூட்டுத்தொடரில் பங்கெடுக்கும் ரஷியப் பிரதிநிதிக் குழுவினர்கள் தங்கு தடையின்றி அமெரிக்காவில் நுழைவதை அமெரிக்கா உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று ரஷியா உறுதியாக கோரித்துள்ளது. மேலும், 18ஆம் நாள் அவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு மீண்டும் சென்று இக்குழுவினர்களின் விசா பிரச்சினை குறித்து கலந்தாய்வு செய்வார் என்று அவர் தெரிவித்தார்.