சீனா-ஜப்பான் இடையே 9ஆவது உயர்நிலை அரசியல் பேச்சுவார்த்தை
2022-08-18 16:54:33

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் இயக்குநருமான யாங் ஜியேச்சி ஆகஸ்டு 17ஆம் நாள் சீனாவின் தியன்ஜின் மாநகரில் ஜப்பானின் தேசியப் பாதுகாப்பு செயலகத் தலைவர் டாகெயொ அகிபாவுடன் இணைந்து, 9ஆவது சீன-ஜப்பான் உயர்நிலை அரசியல் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினர்.

யாங் ஜியேச்சி கூறுகையில், சமாதான சகவாழ்வு மற்றும் நட்பு ஒத்துழைப்பு, சீன-ஜப்பான் உறவுக்கான ஒரே ஒரு சரியான தெரிவாகும். இருதரப்பும் இருநாட்டு தலைவர்களின் முக்கிய பொது கருத்துக்களை அரசியல் வழிகாட்டலாகக் கொண்டு, வலுவான பொறுப்புணர்வு மற்றும் சொந்த நம்பிக்கையுடன் உட்புற மற்றும் வெளிப்புற தலையீடுகளை அகற்றி, புதிய யுகத்தின் தேவைக்குப் பொருந்திய இருநாட்டுறவை கூட்டு முயற்சியுடன் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், தைவான் சீனாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். இந்தப் பிரச்சினை, இருநாட்டுறவின் அரசியல் அடித்தளம் மற்றும் அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்புடையது. இருநாடுகள் மற்றும் இருநாட்டு மக்களின் நீண்டகால நலன்களை ஜப்பான் கருத்தில் கொண்டு, சீனா மீது நேர்மறையான பகுத்தறிவார்ந்த கொள்கையைப் பின்பற்றி, அமைதியான வளர்ச்சியில் நிலைத்து நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.