ஜூலையில் புதிய உச்சத்தை எட்டிய பிரிட்டனின் CPI
2022-08-18 15:22:54

பிரிட்டன் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, இவ்வாண்டு ஜூலை அந்நாட்டின் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டின் ஜூலையில் இருந்ததை விட, 10.1விழுக்காடு அதிகரித்து கடந்த 40ஆண்டுகளில் காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இவ்வாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை, பிரிட்டனின் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் காணாத புதிய உச்சத்தைத் தொடர்ச்சியாக எட்டியுள்ளது. உயர்வான பணவீக்கத்தைக் குறைக்கும் விதம், ஆகஸ்ட் துவக்கத்தில் அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் முதல் பிரிட்டனின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவது இது 6ஆவது முறையாகும். மேலும், செப்டம்பரில் அது வட்டி விகிதத்தை தொடர்ந்து பெருமளவில் அதிகரிக்கக் கூடும்.