ஜப்பானில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு
2022-08-18 10:30:53

ஜப்பானின் என்எச்கே நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, ஜப்பானில் கடந்த மாதத்தில்  புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 60 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. 17ஆம் நாள், புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 31 ஆயிரத்து 499ஐ எட்டியது. இதனால், ஜப்பானின் பல பகுதிகளில் சுகாதாரத் துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

புதிய ரக கரோனா வைரஸ் "ஒரு சாதாரண ஜலதோஷம் போன்று அல்ல". மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, தினசரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு கியோட்டோ மாநிலத்தில் 14 மருத்துவ நிறுவனங்கள் 15ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.