சர்வதேச வர்த்தகத்தில் தலையிடும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
2022-08-18 19:56:52

சில்லுகள் மற்றும் அறிவியல் மசோதாவை அமெரிக்கா அண்மையில் ஏற்றுக் கொண்டது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷு யுதிங் 18ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சர்வதேச வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் செயலை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. சொந்த சட்டப்பூர்வ நலன்களைப் பேணிக்காக்கும் விதம் தேவைப்படும் போது வலிமைமிக்க உகந்த நடவடிக்கையை சீனா மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் சில்லுகள் மற்றும் அறிவியல் மசோதா, அதன் உள்நாட்டு சில்லு தொழிலுக்கு பெருந்தொகை மானியம் மற்றும் வரி வசூல் சலுகையை வழங்குகிறது. சீனாவிலுள்ள குறிப்பிட்ட நிறுவனங்களின் இயல்பான வணிக மற்றும் முதலீட்டுச் செயல்கள் அதிலுள்ள சில விதிகளால் கட்டுப்படுத்தப்படும். தெளிவான பாகுபாடு உடைய இம்மசோதா, சந்தை மற்றும் சர்வதேச வர்த்தக விதிமுறையைக் கடுமையாக மீறியுள்ளது. உலகளாவிய அரை மின் கடத்தி வினியோகச் சங்கிலிக்கும் சர்வதேச வர்த்தகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.