ஒரே சீனா என்ற கோட்பாட்டை ஜப்பான் பின்பற்ற வேண்டும்:சீனா
2022-08-18 17:29:02

ஆகஸ்டு 17ஆம் நாள் நடைபெற்ற சீன-ஜப்பானிய 9வது உயர்நிலை அரசியல் பேச்சுவார்த்தையில், தைவான் நீரிணையின் நிலைமை குறித்து ஜப்பான் நிலைப்பாடு தெரிவித்தது. சீனாவின் இராணுவப் பயிற்சி ஜப்பானின் தனி உரிமை பொருளாதாரப் பிரதேசத்துடன் தொடர்புடையது என்று ஜப்பான் தரப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 18ஆம் நாள் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை ஜப்பான் பின்பற்றி, தனது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். அத்துடன், தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிதானத்துக்குத் துணைப் புரிய வேண்டும் என்றார்.