வடக்கிழக்கு சீனாவின் மறுமலர்ச்சியை முன்னேற்றுவதற்குக் காரணம் என்ன?
2022-08-18 19:11:43

ஹெய்லோங்ஜியாங், ஜீலின், லியாவ்நிங் ஆகிய மூன்று மாநிலங்கள் அமைந்துள்ள சீனாவின் வடக்கிழக்குப் பகுதி, நாட்டின் முக்கியமான தொழில்துறை மற்றும் விவசாயத் தளமாகத் திகழ்கிறது. இப்பகுதியின் மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னேற்றுவது, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இலக்குடன் நெருங்கிய தொடர்புடையது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, ஷிச்சின்பிங் பல முறை இப்பகுதியில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தெளிந்த நீர் மற்றும் பசுமையான மலையும், பனி வளமும் செல்வமாகும் என்ற கருத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். சிறந்த இயற்கைச் சூழலானது, வடக்கிழக்குப் பகுதியின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு மதிப்புமிக்க மூலவளமும் இப்பகுதியின் மறுமலர்ச்சிக்கு மேன்மையும் ஆகும் என்பதை அவரது கருத்து வெளிக்காட்டியுள்ளது.

பழைய தொழில்துறை தளமான வடக்கிழக்குப் பகுதி, சீனர்களுக்கு பெருமையைக் கொண்டு வந்தது. ஆனால் புதிய வளர்ச்சி நிலைக்கேற்ப, மாற்றம் தேவைப்படுகிறது. வளர்ச்சி முறை மாற்றப் போக்கில் இம்மூன்று மாநிலங்கள் முயற்சி செய்து நிதானமாக முன்னேறி வருகின்றன. இயங்குமுறை சீர்திருத்தம் மாற்றத்துக்கான வழிமுறை. தற்சார்பு புத்தாக்கம் வளர்ச்சிக்கான இயக்காற்றல்.

தற்போதைய வடக்கிழக்குப் பகுதியில், சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கமானது, உண்மை பொருளாதார முறை மாற்றத்துக்கு வலிமைமிக்க உந்துவிசையாக அமைந்துள்ளது. அங்குள்ள தனியான பொருளாதார கட்டமைப்பு மேம்பட்டு வருகிறது. பல ஆதாரத்தூண்கள், பல தொழில்கள் மற்றும் பல வளர்ச்சி வடிவங்களைக் கொண்ட தொழில் கட்டமைப்பு உருவாகி வருகிறது.