சீன மத்திய வானிலை மையம் வெளியிட்ட அதிக வெப்பநிலை சிவப்பு எச்சரிக்கை
2022-08-19 15:43:05

சீன மத்திய வானிலை மையம் 19ஆம் நாள் அதிக வெப்பநிலை குறித்து சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது. ஜூலை 21ஆம் நாள் முதல், தொடர்ந்து 30ஆவது நாளாக அதிக வெப்பநிலை எச்சரிக்கையையும், தொடர்ந்து 8வது நாளாக சிவப்பு எச்சரிக்கையையும் மத்திய வானிலை மையம் வெளியிட்டது. இந்த சுற்று அதிக வெப்ப அலை, 25ம் நாள் வரை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களில், சிச்சுவான், ஜியாங் ஹான், ஜியாங்குவாய், ஜியாங்னான் முதலிய இடங்களில் தொடர்ந்து அதிக வெப்பநிலை இருக்கும். மேற்கூறிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும்.