சீன வெளியுறவு அமைச்சர் தலைமை தாங்கிய சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் கூட்டம்
2022-08-19 16:23:09

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 8ஆவது அமைச்சர்கள் கூட்டத்தின் சாதனையைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்கு, சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ காணொளி வழியாக தலைமை தாங்கினார்.

கடந்த நவம்பர் திங்களில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 8ஆவது அமைச்சர்கள் கூட்டம் தகால் நகரில் நடைபெற்றது. ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் 9 திட்டப்பணிகள் துவங்குவதை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அறிவித்தார். கடந்த அரையாண்டில், சீனாவும் ஆப்பிரிக்க நாடுகளும் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, இக்கூட்டத்தின் சாதனையை செயல்படுத்தி, ஆப்பிரிக்க மக்களுக்கு நலன் தந்துள்ளன என்று வாங் யீ தெரிவித்தார்.

இம்மன்றத்தின் 8ஆவது அமைச்சர்கள் கூட்டத்தின் சாதனையை செயல்படுத்தியதற்கு சீனா ஆற்றிய பங்குக்கு ஆப்பிரிக்க தரப்பு உயர்வாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.