2022ஆம் ஆண்டு உலக இயந்திர மனிதர் மாநாடு
2022-08-19 16:36:44

2022ஆம் ஆண்டு உலக இயந்திர மனிதர் மாநாடு ஆகஸ்டு 18ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. உலகளவில் இயந்திர மனிதர் துறையில் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள், பள்ளிகள், அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவை, தொழிற்துறை, வேளாண்மை, மருத்துவம், சேவை உள்ளிட்ட துறைகளில் படைத்த புதிய ஆய்வுச் சாதனைகள் இம்மாநாட்டில் காணப்படுள்ளன.

23 சர்வதேச நிறுவனங்கள் நடப்பு மாநாட்டுக்கு ஆதரவு அளித்துள்ளன. இம்மாநாட்டைச் சேர்ந்த பொருட்காட்சி பகுதியின் நிலப்பரப்பு 40 ஆயிரம் சதுர மீட்டரை எட்டியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் பங்கெடுத்த பல தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் கூறுகையில், உலகத் தொழிற்சாலை மற்றும் சந்தையான சீனா, இயந்திர மனிதர் ஆய்வு மற்றும் பயன்பாட்டுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அத்துடன், சீனாவின் இயந்திர மனிதர் தொழில் நிறுவனங்கள், உலகப் புத்தாக்கத்துடன் ஆக்கமுடன் ஒன்றிணைத்து, இயந்திர மனிதர் தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் நிதானத்தைப் பேணிக்காத்து வருகின்றன என்று தெரிவித்தனர்.