பாதுகாப்பு பற்றி அமெரிக்க மக்களின் கொடுங்கனவு
2022-08-19 11:23:28

அமெரிக்காவின் நியூயார்கில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதனைத் தவிர்க்கும் விதம், சில பேரங்காடி மற்றும் வணிக வளாகங்கள் டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி, பற்பசை, சோப்பு முதலிய மலிவான பொருட்களைப் பூட்டி வைத்து விற்பனை செய்யப்பட வேண்டியிருந்தது. இந்தக் காட்சி அமெரிக்க தேசிய நெருக்கடியை நேரில் வெளிகாட்டியுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் அறிவித்தன.

தற்போது, உயர்ந்த குற்ற விகிதம் அமெரிக்கா நாடு முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டுச் சம்பவத்தைத் தவிர, துப்பாக்கிச் சூடு மற்றும் வெறுப்பு வன்முறைத் தாக்குதல்களாலும் அமெரிக்கர்கள் அவதிப்படுகின்றனர்.

உலகில் உயர்ந்த வன்முறை குற்ற விகிதம் கொண்ட நாடாக அமெரிக்கா விளங்கியுள்ளது. இப்போது இந்நிலைமை மேலும் தீவிரமாகி வருகிறது. கோவிட்-19 தொற்று, பணவீக்கம் உள்ளிட்டவை அதற்கான நேரடி காரணமாகும்.

ஜூலையில் அமெரிக்காவின் துப்பாக்கி விற்பனைத் தொகை 12லட்சத்தைத் தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்ற வாஷிங்டன் போஸ்ட்டின் அறிவிப்பு அமெரிக்க மக்களின் கவலையைக் கடுமையாக்கியுள்ளது. தற்காப்புக்காக மேலும் அதிகமான அமெரிக்க மக்கள் துப்பாக்கி வாங்கியுள்ளனர். அதே வேளை இதனால், மேலும் அதிகமானோர் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டு வருகின்றனர். இது ஒரு கேடான சூழற்சியை உருவாக்கியுள்ளது.