இந்தியாவின் முதல் மின்சார இரட்டை அடுக்கு பேருந்து மும்பையில் அறிமுகம்!
2022-08-19 17:23:16

இந்தியாவின் முதல் மின்சார இரட்டை அடுக்கு பேருந்து வியாழக்கிழமை அன்று  மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது நாட்டின் முதல் அரை-குறைந்த தளம், குளிரூட்டப்பட்ட மற்றும் மின்சார இரட்டை அடுக்கு பேருந்து ஆகும். 65 இருக்கைகள்  கொண்ட இப்பேருந்து 650 வோல்ட்டேஜ் மின்னழுத்ததால் இயக்கப்படுகிறது என்று வாகன தயாரிப்பாளரான ஸ்விட்ச் மொபிலிட்டி தெரிவித்துள்ளது.

இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இப்பேருந்தை அறிமுகப்படுத்திய பிறகு கூறுகையில், நகர்ப்புற போக்குவரத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்தி, குறைந்த கார்பன் மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையிலான மின்சார வாகன அமைப்பை உருவாக்க முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான அசோக் லேய்லண்டின் துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி, மும்பையில் ஏற்கனவே 200 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளுக்கான முன்பதிவு படிவத்தைப் பெற்றுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு மின்சார வாகன நாடாக மாற இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.