அல்ஜீரியாவில் காட்டுத் தீ விபத்து
2022-08-19 14:39:10

அல்ஜீரியா கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியிலுள்ள காட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 183 பேர் காயமடைந்தனர். இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தாரிஃப் மாநிலத்தில் மட்டும் 30 பேர் உயிரிழந்தனர். 161 பேர் காயமடைந்தனர். சுமார் 14 ஆயிரம் ஹெக்டர் காடுகள் எரிந்து நாசமாகின என்று அல்ஜீரிய தேசிய செய்தி நிறுவனம் ஆகஸ்டு 18ஆம் நாளிரவு செய்தி வெளியிட்டது.