சீனாவில் செழிப்பான மற்றும் வசதியான பொது பண்பாட்டுச் சேவைகள்
2022-08-19 16:51:24

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை 18ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், புதிய யுகத்தின் பரப்புரை மற்றும் பண்பாட்டுத் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பெறப்பட்ட சாதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, பொது பண்பாட்டுச் சேவையின் தர நிர்ணயம் மற்றும் சமநிலையை சீனா முன்னேற்றி வருகிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தில் பொது பண்பாட்டுச் சேவை வசதிகளின் வலைப்பின்னலை முழுமையாக்குவதன் மூலம், பொது மக்களுக்கு மேலும் செழுமை வசதி மற்றும் சுவைமிக்க பண்பாட்டுப் பொருட்களையும் சேவைகளையும் வழங்க சீனா பாடுபட்டு வருகிறது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சர் சுன் யேலீ இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டின் இறுதிவரை, நாடளவில் 2542 வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள், 3215 பொது நூலகங்கள், 3316 பண்பாட்டு மையங்கள், 6183 அருங்காட்சியகங்கள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவட்ட பண்பாட்டு நிலையங்கள், 5 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர் நிலை பன்னோக்கு பண்பாட்டுச் சேவை மையங்கள், 5 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற நூலகங்கள் ஆகியவை உள்ளன. மேலும், பொது நூலகங்கள், பண்பாட்டு மையங்கள், நுண்கலை காட்சியகங்கள், பன்னோக்கு பண்பாட்டு நிலையங்கள் மற்றும் பெரும்பாலான அருங்காட்சியகங்கள் மக்களுக்கு இலவசமாகத் திறந்து வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.