வாங் யீ மற்றும் போனாவின் தொடர்பு
2022-08-20 17:14:53

ஆகஸ்டு 19ஆம் நாள் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளிவிவகார ஆலோசகர் போனாவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். 2024ஆம் ஆண்டில் சீனாவுக்கும் பிரான்ஸுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவு, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றை வரவேற்கும் விதம், மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டுத் துறையில் இரு நாடுகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொண்டு, பண்பாட்டுத் தொடர்புடைய பெரிய நாடுகளாகக் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்ற வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.

தைவான் பிரச்சினையில் சீனாவின் நிலையான நிலைப்பாட்டையும் வாங் யீ விளக்கினார்.

சர்வதேச உறவின் அடிப்படை விதிமுறைகளின் படி, பிரதேசங்களின் பாதுகாப்பையும் அமைதியையும் நிதானத்தையும் பேணிகாக்க வேண்டும் என்று பிரான்ஸ் கருதுகின்றது. சீனாவைப் போலவே, பனிப்போர் மனநிலையைப் பிரான்ஸ் நிராகரிக்கிறது என்று போனா தெரிவித்தார்.