எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு மன்றச் செயலாளர்களின் 17ஆவது கூட்டம்
2022-08-20 16:50:32

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு மன்றச் செயலாளர்களின் 17ஆவது கூட்டம் ஆக்ஸ்ட் 19ஆம் நாள் உஸ்பெக்ஸ்தானின் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான கமிட்டி துணை தலைவரும், பொதுப் பாதுகாப்பு அமைச்சருமான வாங் ஷியோ ஹுங் காணொளி வழியாக அதில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சீனா, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள், சட்ட அமலாக்க ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழமாக்கும் என்று தெரிவித்தார். மேலும், பொது கருத்துகளை உருவாக்கி, வெளிப்புற சக்திகள், பிராந்திய விவகாரங்களில் தலையிடுவதைத் தடுப்பது, பயங்கரவாதத் தடுப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, தொடர்பை அதிகரிப்பது முதலிய முன்மொழிவுகளை, அவர் வழங்கினார்.