இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பொருளாதார முன்னேற்றம் குறித்து நம்பிக்கை!
2022-08-20 16:51:33

இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த பல முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறன. இப்போது அத்தகைய முடிவுகளின் பலன்களை மக்கள் காண்கிறார்கள் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வியாழக்கிழமை தெரிவித்தார்.  

"கடைசி மதிப்பாய்வின் போது, பணவீக்கம் 70 விழுக்காட்டை எட்டும் என்று நாங்கள் நினைத்தோம். இருப்பினும், மின்சார கட்டண உயர்வுடன் கூட பணவீக்கம் அவ்வளவு அதிகமாக இருக்காது என்று இப்போது நாங்கள் நம்புகிறோம்." என்று வீரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முன்பிருந்து கடுமையான அந்நிய செலவாணிப் பற்றாக்குறையில் மேம்பாடு காணப்பட்டுள்ளது. இப்போது எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்யும் நிலையில் இலங்கை உள்ளது என்று வீரசிங்க கூறினார்.