இந்தியாவில் குரங்கம்மை பரிசோதனை கருவி வெளியீடு
2022-08-20 17:16:16

ஆர்டி-பி.சி.ஆர் எனும் குரங்கம்மை பரிசோதனைக் கருவி, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது கருவியாகும். இந்த பரிசோதனை கருவி, தெற்கு மாநிலமான அந்திரப்ரதேசத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது என்று உள்ளூர் தினசரியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 

டிரான்ஸ் ஏசியா பயோ-மெடிகல்ஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த பரிசோதனை கருவி, ஆந்திரா மெட்டெக் மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சோதனை கருவியில் உள்ள தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ப்ரைமர் மற்றும் ப்ரோபின் மூலம் எளிமையான முறையில்  துல்லியமான ஆய்வைக் மேற்கொள்ள முடியும்.