தானியம் மற்றும் உர விநியோகம் உலகச் சந்தைக்குத் துணை புரியும்:குட்ரேஸ்
2022-08-21 16:41:39

உக்ரைன் மற்றும் ரஷியாவிலிருந்து மேலும் அதிகமான தானியம் மற்றும் உரங்களை விநியோகிப்பது, மொத்தச் சந்தை நிதானத்துக்கும், விலைவாசி குறைவுக்கும் அதிமுக்கியமானது என்று ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் 20ஆம் நாள் இஸ்தான்புலில் தெரிவித்தார்.

விவசாயப் பொருட்களின் போக்குவரத்து குறித்து, அண்மையில் எட்டியுள்ள ஒப்பந்தத்தின்படி, ரஷியாவின் தானியம் மற்றும் உரங்கள், தடை விலக்கு பெற்றன. அதனால் இந்தப் பொருட்களை தடையில்லாமல் உலகச் சந்தைக்குள் விநியோகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குட்ரேஸ் சுட்டிக்காட்டினார்.