சீனத் தொழில் முறை கல்வி வளர்ச்சி வெள்ளை அறிக்கை வெளியீடு
2022-08-21 17:03:54

சீனத் தொழில் முறை கல்வி வளர்ச்சி பற்றிய வெள்ளை அறிக்கை 20ஆம் நாள் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, தொழில் முறை கல்விக்கு சீன அரசு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது. தேசியக் கல்வி முறைமை மற்றும் மனித வள ஆற்றல் மேம்பாட்டின் முக்கிய பகுதியாக, தொழில் முறை கல்வி, சீனப் பாணியிலான நவீனமயமாக்கப் பாதைக்கு வலுவான ஆற்றலை ஊட்டி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற மேடைகளை உருவாக்கி, உலகத்துடன் தொழில் முறை கல்வியின் சீர்திருத்தச் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வது, சீனாவின் அருமையான விருப்பமாகும் என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.