சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி சேவை
2022-08-21 17:11:57

இவ்வாண்டில் சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி சேவை மொத்தமாக 10 ஆயிரம் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 9 இலட்சத்து 72 ஆயிரம் கொல்கலன்கள் அனுப்பப்பட்டு, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த சர்வதேசச் சரக்கு போக்குவரத்துப்பாதை, பன்னாட்டுத் தொழிற்துறை சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் நிதானத்தைப் பேணிகாப்பதற்கும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை உயர் தரத்துடன் கூட்டாக கட்டியமைப்பதற்கும் வலுவான ஆதரவை வழங்கியுள்ளது.

தற்போது, சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டிச் சேவை 82 இயக்க வழித்தடங்களில் மேற்கொள்கின்றது. போக்குவரத்து சேவை, ஐரோப்பா முழுவதிலும் பரவல் செய்துள்ளது. ஆடைகள், காலணிகள் மற்றும் தொப்பிகள், வாகனங்கள் மற்றும் பாகங்கள், தானியங்கள், மரம் முதலிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் சரக்கு தொடர்வண்டிகளில் அனுப்பப்பட்டுள்ளன.