இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு
2022-08-21 17:12:35

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் வீடு இடிந்து விழுந்து, நிலச்சரிவுகளில் 12 பேர் காயமடைந்த நிலையில், மேலும் 6 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

மழையின் சீற்றத்தால் பாலங்கள் உடைந்து தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் வழிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமான இந்த மாநிலத்தில், பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.