இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 50,000 டெங்கு பாதிப்புகள்
2022-08-21 18:51:38

இலங்கையில் கடந்த 8 மாதங்களில் 49,941 பேர் டெங்கு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில், பாதியளவு டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

டெங்கு கொசுவின்  பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வாங்குவதற்கு கொழும்பு மாநகரட்சி மன்றத்துக்குப் போதிய நிதி இல்லாததால், வருடாந்திர டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களில் பல சவால்களை எதிர்நோக்குவதாக தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.