ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு
2022-08-22 10:16:59

அண்மையில் ஆப்கானிஸ்தானின் லோகார் மாநிலத்தில் கடும் மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். 3000க்கு மேலான வீடுகளும் 2000 ஹெக்டருக்கு மேலான நிலங்களும் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி பலி ஆயின.

வரும் சில நாட்களில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாநிலங்களில் கடும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு நிகழ வாய்ப்பு உள்ளது என்று ஆப்கானிஸ்தான் வானிலை வாரியம் தெரிவித்தது.