எண்ணியல் பொருளாதாரம் சீன வளர்ச்சிக்கு உந்து ஆற்றல் ஊட்டும்
2022-08-22 17:38:36

2022ஆம் ஆண்டு சீன எண்ணியல் பொருளாதாரத்தின் தொழில் துறை கூட்டம் ஜியாங் ஷி மாநிலத்தில் ஆக்ஸ்ட் 20, 21 நாட்களில் நடைபெற்றது. தரவுகளின்படி, 2012 முதல் 2021ஆம் ஆண்டு வரை சீன எண்ணியல் பொருளாதாரத்தின் மதிப்பு 11 இலட்சம் கோடி யுவானிலிருந்து, 45.5 இலட்சம் கோடி யுவானாக உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் எண்ணியல் பொருளாதாத்தின் பங்கு, 21.6 விழுக்காட்டிலிருந்து 39.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது எண்ணியல் பொருளாதாரம், சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சிக்கான புதிய உந்து விசையாக மாறியுள்ளது.

சீனாவின் எண்ணியல் பொருளாதார மதிப்பு, பல ஆண்டுகளாக உலகளவில் 2ஆவது இடம் பிடித்துள்ளதை இவ்வாண்டு வெளியிடப்பட்ட உலக எண்ணியல் பொருளாதார வெள்ளை அறிக்கை காட்டுகிறது.