பிரிட்டனில் அருங்காட்சியகம் குளிருக்கு எதிரான புகலிடமாக மாற வாய்ப்புண்டு
2022-08-22 10:14:19

வரும் குளிர்காலத்தில் பிரிட்டனிலுள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் அந்நாட்டின் மக்கள் வெப்பத்தை பெறும் புகலிடமாக மாற வாய்ப்புள்ளது.

பிரிட்டனின் தி கார்டியன் நாளேட்டில் வெளியான தகவலின்படி, குளிர்காலத்தின் எரியாற்றல் பற்றாக்குறையைச் சமாளித்து குளிர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கும் விதம், உள்ளூர் சபைகள், குடியிருப்புக் குழுக்கள் மற்றும் அறக்கொடை நிறுவனங்கள் வெப்ப வசதி வலைப்பின்னலை வழங்க உள்ளது. இதனிடையே, குளிர்ச்சி மிக்க மாதங்களில் வெப்ப வசதி கட்டணத்தை ஏற்க முடியாத மக்களுக்கு அருங்காட்சியகங்கள், நூலகங்கள் போன்ற பொது கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுவதை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசு நிதியுதவி வழங்குமாறு குறிப்பிட்ட துறையினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டன் அருங்காட்சியக சங்கத்தின் கொள்கை மேலாளர் கூறுகையில், எரியாற்றல் நெருக்கடியைச் சமாளிப்பதில் அருங்காட்சியகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் பல அருங்காட்சியகங்கள் தங்களுக்கு வெப்பத்தை வழங்குவது கடினம் என்று தெரிவித்தார்.

தவிரவும், பிரிட்டனிலுள்ள முதியோர் இல்லங்கள் எதிர்கொள்ளும் நிலைமையும் சீராக இல்லை.