ஒரு சீனா கொள்கை சீனாவின் மைய நலன்
2022-08-22 20:13:32

சீனாவுக்கான அமெரிக்க தூதர் பெர்ன்ஸ் 19ஆம் நாள் சிஎன்என் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, அமெரிக்க பிரதிநிதிகள் அவைத் தலைவர் பெலோசியின் தைவான் பயணம் தொடர்பாகச் சீனா அளவுக்கு மீறி செயல்பட்டதுடன் தைவான் நீரிணையின் நிலைமையைப் பாதிக்கும் சக்தியாக மாறியுள்ளது என்று தெரிவித்தார். இதனால், அமெரிக்க-சீன உறவு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்தியாளரின் கேள்விக்குச் சீன வெளியிறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்கையில்,

அமெரிக்காவே பிரதேச நெருக்கடியை ஏற்படுத்தியது, சீனா அல்ல. தைவான் நீரிணையின் தற்போதைய நிலைமையைச் சீர்குலைக்கும் தரப்பு அமெரிக்காவே, சீனா அல்ல என்று சுட்டிக்காட்டினார். ஒரே சீனா கொள்கை சீனாவின் மைய நலன்களில் மிக முக்கியதொரு பகுதியாகும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.