இந்தியாவில்கடும் மழை பெழிவு
2022-08-22 10:32:19

கடந்த சில நாட்களில் இந்தியாவில் கடும் மழை பெழிவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 52 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போனர் என்று இந்திய செய்தி ஊடகங்கள் 21ஆம் நாள் செய்தி வெளியிட்டன.

ஹிமாச்சல பிரதேசம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இப்போது இன்னும் 6 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இம்மாநிலத்தில் பல வீடுகள் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. சில பகுதிகளில், நெடுஞ்சாலை, இருப்புப்பாதை, பயணிகள் விமான போக்குவரத்து ஆகிய சேவைகள் நிறுத்தப்பட்டன.

அடுத்த இரு நாட்களில், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்திராஞ்சல் மாநிலத்தின் பல இடங்களில் கடும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை வாரியம் எச்சரிக்கை வெளியிட்டது.