மொகாடிசுவில் நிகழ்ந்த பயங்கரத் தாக்குதலில் 21 பேர் பலி
2022-08-22 17:42:01

சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் 19ஆம் நாளிரவு நிகழ்ந்த பயங்கர வெடிகுண்டுத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். 117 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் 21ஆம் நாள் உறுதிப்படுத்தியது.

தீவிரவாதிகள் இரண்டு கார்களில் நிரப்பியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். விடுதிக்குள் நுழைந்து பலரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர். பின்னர், சோமாலிய ராணுவத்தினருக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்குமிடையே 30 மணி நேரத் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சோமாலிய ராணுவத்தினர் தங்கும் விடுதியை மீட்டதுடன் பணயக்கைதிகளையும் மீட்டனர். சோமாலியாவின் தீவிர அமைப்பான "அல் ஷபாப்" இத்தாக்குதலை நடத்தியதாக 20ஆம் நாள் தெரிவித்தது.