பல்வேறு நாடுகளின் அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்:சீனா
2022-08-23 14:16:52

ஐ.நா பாதுகாப்பவையின் நடப்புத் திங்கள் தலைவர் பதவி வகிக்கும் நாடான சீனாவின் முன்மொழிவின்படி, “பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பொது பாதுகாப்பைப் பேணிக்காப்பது” என்ற தலைப்பிலான வெளிப்படைக் கூட்டம், பாதுகாப்பவை ஆகஸ்டு 22ஆம் நாள் நடத்தியது. ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங் ச்சுன் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார்.

அவர் கூறுகையில், பல்வேறு நாடுகளின் அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளிப்பது, பொது பாதுகாப்பை நனவாக்கும் அடிபடையாகவும், நாடுகள் தொடர்பு கொள்வதற்கான முக்கிய விதியாகவும் திகழ்கிறது என்றார்.

மேலும், பிற நாடுகளின் அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு சீனா எப்போதுமே மதிப்பு அளித்து, சர்வதேச சமநிலை மற்றும் நீதியை உறுதியாகப் போணிக்காத்து, பொது பாதுகாப்பை நனவாக்கும் வகையில் சர்வதேசச் சமூகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளையில், சொந்த அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்காக சீனா அணைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.