வேலை வாய்ப்புக்கான முன்னுரிமை கொள்கை பற்றிய விவாதம் மற்றும் ஆலோசனை
2022-08-23 10:19:51

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது தேசிய கமிட்டி நிலைக்குழுவின் 23ஆவது கூட்டம் ஆகஸ்டு 22ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. வேலை வாய்ப்புக்கான முன்னுரிமை கொள்கையை உறுதியுடன் நடைமுறைப்படுத்துவது என்பது நடப்புக் கூட்டத்தின் கருப்பொருட்களில் முக்கியமான ஒன்றாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிலையான உறுப்பினரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான வாங் யாங் இக்கூட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

அழைப்பின் பேரில் இக்கூட்டத்தில் பங்கெடுத்து அறிக்கை வழங்கிய சீனத் துணைத் தலைமை அமைச்சர் ஹு சுன்ஹுவா, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார். அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வலிமைமிக்க தலைமையில், நாட்டின் வேலை வாய்ப்பு பணி பல சாதகமற்ற காரணிகளின் தாக்கத்தை எதிர்த்து, புதிய சாதனைகளைப் பெற்று வருகிறது. இப்பணியை மேலும் செவ்வனே செய்யும் வகையில், கட்சியின் தலைமைப் பங்கினையைப் பின்பற்றி வலுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை வழங்குவதில் ஊன்றி நின்று, அமைப்புமுறை சார் மேம்பாட்டை சீராகப் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். மேலும், வேலை வாய்ப்பு நிலைமையை நிலைப்படுத்துவதற்கான கொள்கை நடவடிக்கைகளை சீராக மேற்கொண்டு, வேலை வாய்ப்புச் சேவைகளை மேம்படுத்தி, தொழிலாளர்களின் உரிமை நலன்களுக்கான உத்தரவாதத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.