முதலீட்டை அதிகரிக்கக் கூட்டு முயற்சி மேற்கொள்ளும் மால்டா மற்றும் இந்தியா
2022-08-23 10:52:55

மால்டா வெளியுறவு அமைச்சர் இயன் போர்க், இந்திய வெளியுறவு மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி ஆகியோர் திங்கள்கிழமை வாலெட்டா நகரில் பேச்சுவார்த்தை நடத்தி, மால்டாவில் இந்தியாவின் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வழிமுறைகள் பற்றி விவாதம் நடத்தினர்.

போர்க் கூறுகையில், இருதரப்புறவு 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் வலுப்படுத்தப்பட முடியும். இந்நிலையில், இருநாட்டு மக்களுக்கு நன்மை புரியும் விதம், இருநாடுகள் கொண்டுள்ள துடிப்பான பொருளாதாரம் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்பு, மருந்து தயாரிப்பு, திரைப்படத் தொழில் கூட, ஒத்துழைப்புக்கான பல வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மால்டாவின் அமைச்சர் நிலை பிரதிநிதிக் குழு அடுத்த மாதம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளது.