சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதியில் ஒன்றுகூடும் தொழில்கள்
2022-08-23 14:22:46

தற்போதைய சீனாவில் மேலதிக இளைஞர்கள் நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதியை தங்கள் தொழில் தொடங்குவதற்கான இடமாகக் கருதுகின்றனர். இதற்குக் காரணம் என்ன?

கடந்த 10 ஆண்டுகளில் சாதனத் தயாரிப்பு, புதிய எரியாற்றல் உள்ளிட்ட நெடுநோக்கு தன்மை வாய்ந்த புதிய தொழில்கள், கிழக்கு சீனாவின் கடலோரப் பகுதியிலிருந்து உள் பிரதேசத்துக்கு விரிவாகி, மத்திய மற்றும் மேற்குப் பகுதியில் புதிய தொழில் தொகுதிகளாக மாறி வருகின்றன. இதனிடையே, மத்திய மற்றும் மேற்கிலுள்ள பல நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. செயற்கைக் கோள் படங்களின் மூலம், இந்நகரங்களின் மாற்றங்கள் எளிதில் காணப்படுகின்றன. இரவின்போது இந்த மாற்றங்கள் மேலும் தெளிவாகியுள்ளன. வட மேற்கிலுள்ள சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், தென் மேற்கிலுள்ள யுன்னான் மாநிலம் ஆகியவற்றில் இரவு ஒளி வீசும் பகுதியின் நிலப்பரப்பு முன்பை விட 80 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது.

10 ஆண்டுகளில், நாட்டின் பிரதேச வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டங்களால், எல்லை மற்றும் கடலோரப் பகுதியிலிருந்து தூரமான உள் பிரதேசம், சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக்கான முன்தளமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.