சீனாவின் சேவை வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி அதிகரிப்பு
2022-08-23 15:02:18

சீனாவின் சேவை வர்த்தக வளர்ச்சியையும் 2022ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியின் ஆயத்த நிலைமையையும் ஆகஸ்டு 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் அறிமுகப்படுத்தியது.

2012ஆம் ஆண்டு முதல், சீனாவின் சேவை வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆண்டுக்கு சராசரியாக  6.1 விழுக்காடில் அதிகரித்து வருகின்றது. இவ்வேகம், உலகின் அதிகரிப்பு வேகத்தை விட 3.1 புள்ளிகள் அதிகம். உலக தரவரிசையில், சீனாவின் சேவை வர்த்தகம் 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று சீன வணிக அமைச்சகத்தின் சேவை வர்த்தம் மற்றும் வணிகச் சேவை பிரிவின் தலைவர் வாங் துங்தாங் தெரிவித்தார்.

சேவை வர்த்தக பொருட்காட்சியின் பங்கு குறித்து அவர் கூறுகையில்,

இப்பொருட்காட்சி துவங்கிய பிறகு, சந்தைமயமாக்கம் மற்றும் சர்வதேச மயமாக்கத்தின் நிலை இடைவிடாமல் உயர்ந்து வருகின்றது. பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், தொழில் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்புக்கும், அவற்றின் பேச்சுவார்த்தை, கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் அனுபவப் பரிமாற்றத்திற்கும் இப்பொருட்காட்சி, சர்வதேச மேடையை உருவாக்கியுள்ளது.

மேலும், உலக சேவை வர்த்தக வளர்ச்சிக்கு இது புதிய ஆற்றலை ஊட்டுவதோடு, சீன சேவை துறையின் உயர் தர வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.