மால்வினஸ் தீவு குறித்து பிரிட்டனின் செயலும் வார்த்தையும் வேறுபாடு
2022-08-23 11:10:04

அர்ஜென்டீனாவிலுள்ள பிரிட்டன் தூதரகத்தின் ஏற்பாட்டில், அர்ஜென்டீனாவிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்ளக் கூடிய இணைய காணொளி போட்டி அண்மையில் தொடங்கப்பட்டது. இப்போட்டியில் விருது பெற்றவர்கள், மால்வினஸ் தீவில் ஒரு வாரமாகவும் இலவசமாகவும் சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, அர்ஜென்டீன வெளியுறவு அமைச்சகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. பிரிட்டன், ஐ.நாவின் தீர்மானத்தைப் பின்பற்றி, மால்வினஸ் தீவின் இறையாண்மை குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும் என்று அர்ஜென்டீனா வேண்டுகோள் விடுத்தது.

1816ஆம் ஆண்டு, ஸ்பேனின் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட போது, அர்ஜென்டீனா மால்வினஸ் தீவின் அரசுரிமையை பெற்றுக்கொண்டது. பிரிட்டன் தென் அமெரிக்க கண்டத்தில் காலனித்துவ விரிவாக்கம் மேற்கொண்ட போது, 1833ஆம் ஆண்டு ஆயுத ஆற்றலின் மூலம் மால்வினஸ் தீவைக் கைப்பற்றியது. 1965ஆம் ஆண்டு 2065ஆவது தீர்மானத்தை ஐ.நா. பேரவை அங்கீகரித்து, மால்வினஸ் தீவு பிரச்சினையை, காலனியாதிக்கத்தை நீக்கும் பணியில் சேர்ந்துள்ளது. பிரிட்டன்-அர்ஜென்டீனா பேச்சுவார்த்தையின் மூலம் மால்வினஸ் தீவு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ஐ.நா வேண்டுகோள் விடுத்தது.

மால்வினஸ் தீவு, அர்ஜென்டீனாவின் உரிமை கடலில் அமைந்துள்ளது என்பதை 2016ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஐ.நா உறுதிப்படுத்தியது. இப்பிரச்சினை குறித்து, லத்தின் அமெரிக்க மற்றும் கரீபியன் பிரதேசத்திலுள்ள கிட்டத்தட்ட எல்லா நாடுகளும், அர்ஜென்டீனாவுக்கு ஆதரவு அளிக்கின்றன. மால்வினஸ் தீவின் மீதான சரியான கோரிக்கைக்கு சீனாவும்  ஆதரவு அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.