கூட்டு வளர்ச்சிக்குத் துணைப் புரிந்த சீன-ஐரோப்பிய இருப்புப்பாதை
2022-08-23 10:49:22

சீன-ஐரோப்பிய இருப்புப்பாதையைச் சேர்ந்த சீனாவின் ஷிஅன் நகரிலிருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகருக்குச் செல்லும் தொடர்வண்டி ஆகஸ்டு 21ஆம் நாள் புறப்பட்டது. இவ்வாண்டில் சீனாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையில் இயங்கும் 10 ஆயிரமாவது தொடர்வண்டி இதுவே ஆகும். அதேநாள், சீனாவிலிருந்து முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட அதிவிரைவு தொடர்வண்டி அதிகாரப்பூர்வமாக ஏற்றிச்செல்லப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில், உயர்வேக இருப்புப்பாதை துறையில் சீனா பல நாடுகளுடன் ஒத்துழைப்பு மேர்கொண்டு, அந்நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளது.

தரவுகளின்படி, தற்போது, சீன-ஐரோப்பிய இருப்புப்பாதையில், ஐரோப்பாவின் 24 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேலான நகரங்களுக்குச் செல்லும் 82 போக்குவரத்து நெறிகள் இடம்பெறுகின்றன. வாகனங்கள், இயந்திரங்கள், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேலான சரக்கு வகைகள் ஏற்றியிறக்கப்பட்டுள்ளன.

தற்போது, கரோனா வைரஸ் பரவல், உக்ரைன் நெருக்கடி உள்ளிட்ட அறைக்கூவல்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பெற்றுள்ள இச்சாதனைகள் உலகின் பல்வேறு நாடுகளின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளைக் காட்டியுள்ளன.

இதுவரை, சீனாவுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்புடைய ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 140ஐ தாண்டியுள்ளது.