எண்ணியல் வளர்ச்சி சீனாவுக்குக் கொண்டு வந்த மாற்றங்கள்
2022-08-24 17:30:52


கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் எண்ணியல் பொருளாதாரத்தின் மதிப்பு, 11 இலட்சம் கோடி யுவானிலிருந்து 45.5 இலட்சம் கோடி யுவானாக உயர்ந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 21.6 விழுக்காடு வகித்துள்ளது. கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் எண்ணியல் துறையின் வளர்ச்சி போக்கு, சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சிக்கு வலுவான ஆற்றலை அளித்து வருகிறது. உதாரணமாக, 2 விவசாயிகள், 4 ட்ரோன்கள் மற்றும் சுமார் 300 நுண்மதி இயந்திரங்களைக் கொண்டு, 200 ஹெக்டர் பருத்தி வயலில் விதைப்பு மற்றும் அறுவடை வேலைகளை நிறைவேற்ற முடியும்.

இதைத் தவிர, எண்ணியல் வளர்ச்சியுடன் சமூகத்தில்ரோபோட் ஆய்வுப் பணியாளர், வணிகத் தரவுகளின் ஆய்வாளர், விவசாய எண்ணியல் தொழில் நுட்பப் பணியாளர் முதலிய புதிய வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் உற்பத்தி, விநியோகம், நுகர்வு உள்ளிட்ட பல துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.