தைவான் பிரச்சினையில் தவறாக செயல்பட்டு வரும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
2022-08-24 10:52:26

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைத் தலைவர் பெலோசி சீனாவின் தைவானில் பயணம் மேற்கொண்டதால் ஏற்பட்ட நெருக்கடியை மீளாய்வு செய்தால், அமெரிக்காவே இதற்கு அடிப்படை காரணம் என்று தப்பு எண்ணம் இல்லாதவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்நெருக்கடியின் பொறுப்பை ஏற்காமல் சீனாவின் மீது பழி தூற்றவும், தைவான் நீரிணையின் நிலைமையைத் தீவிரப்படுத்தவும் அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இது மிகவும் மோசமான செயலாகும்.

பெலோசியின் தைவான் பயணத்தால் ஏற்படக் கூடிய நெருக்கடி பற்றி சர்வதேச சமூகத்தில் தொலை நோக்குடையவர் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொது கருத்துக்களை அமெரிக்கா பொருட்படுத்தாமல் சொந்த விருப்பப்படி செயல்பட்டால் தனது தவறுக்கு விலை கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் கீட்டிங் சுட்டிக்காட்டினார்.

ஒரே சீனா கொள்கை, சீனாவின் மைய நலன்களில் மிக முக்கியமான ஒன்று. பெலோசியின் தவறான செயலிலிருந்து அமெரிக்கா படிப்பினையைப் பெற்று, சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும். தவறான வழியில் தொடர்ந்து செயல்பட்டால், அமெரிக்காவுக்கு சீனா தொடர்ந்து உறுதியுடன் பதிலடி கொடுக்கும்.