சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா தொழிற்துறைகள் ஆற்றியுள்ள முக்கிய பங்குகள்
2022-08-24 17:28:33

சீனப் பண்பாட்டுத் தொழிற்துறை மற்றும் சுற்றுலா துறை, பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்தியாக மாறியுள்ளது. தவிரவும், தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மக்களின் அருமையான வாழ்க்கை மற்றும் தேவையை நிறைவு செய்வது ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் தொழிற்துறை வளர்ச்சிப் பிரிவின் தலைவர் மியாவ் முயாங் 24ஆம் நாள் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய பண்பாட்டுத் துறைச் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, 36 ஆயிரத்திலிருந்து 65 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவற்றின் ஆண்டு வருமானம் 5 இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானிலிருந்து 11 இலட்சத்து 90 ஆயிரம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் முதன்முறையாக சீனாவின் வெளிநாட்டுப் பண்பாட்டுத் துறைச் சார்ந்த வர்த்தகத் தொகை, 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.