© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் செப்டெம்பர் மாதம் மீண்டும் திறக்கப்படும் என இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட நிலையில், வகுப்புகள் இணைய வழியாக நடத்தப்பட்டன என்று இந்த ஆணையத்தின் தலைவர் அமரதுங்க கூறினார்.
ஏறக்குறைய அனைத்து மாணவர்களும் தற்போது இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டனர். மேலும், கல்வி மற்றும் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள், முன்பு போல் நடத்தப்படலாம் என துணைவேந்தர்கள் ஒப்புக்கொண்டதாக அமரதுங்க கூறினார்.