சீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழிலின் வளர்ச்சி
2022-08-24 10:55:37

2021ஆம் ஆண்டில், சீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழிலின் வருமானத் தொகை, சுமார் 2 இலட்சத்து 18 ஆயிரம் கோடி யுவானாகும். இது 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட 11.8 விழுக்காடு அதிகம்.

சீனச் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 23ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அதன் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் நிதி பிரிவின் தலைவர் கூறுகையில்,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் அளவு விரிவடைந்ததோடு, புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு வலிமையான ஆதரவு அளித்துள்ளது. அனல் மின் நிலையத்தின் வெளியேற்ற குறைப்பது, கழிவு பொருட்களை எரிப்பது, நிலக்கரியின் புகையைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்கான தொழில் நுட்பச் சாதனங்கள், உலகின் முன் வரிசையில் உள்ளன என்றார்.