இந்தியாவின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி ஜூலை மாதத்தில் 0.2 விழுக்காடு வளர்ச்சி
2022-08-24 11:27:38

இந்தியாவின் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவில் இருந்து பலவீனமான தேவை காணப்பட்டுள்ளது என்று இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எஃகு பொருட்களின் மீதான ஏற்றுமதி வரி அதிகரிப்பு, ஜூலை மாதத்தில் இந்தியாவின் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியைக் குறைத்த காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஜூலை மாதத்தில் பொறியியல் ஏற்றுமதி அதிகரிப்பு நேர்மறையான வரம்புக்குள் இருந்தபோதிலும், நடப்பு நிதியாண்டின் கடந்த நான்கு மாதங்களில் மிகக் கடுமையான சரிவை எட்டியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.