சபோரோஜியே அணு மின் நிலையம் குறித்த ஐ.நாவின் கூட்டம்
2022-08-24 11:11:54

ரஷியாவின் கோரிக்கைக்கிணங்க, ஐ.நா பாதுகாப்பவை, சாபோரோஜியே அணு மின் நிலையம் குறித்து 23ஆம் நாள், தற்காலிக கூட்டம் ஒன்றை நடத்தியது.

தொடர்புடைய தரப்புகள், மிக பெருமளவிலான கட்டுப்பாட்டைக் கடைபிடித்து, உக்ரைன் சாபோரோஜியே அணு மின் நிலையத்தின் இடர்பாட்டை இயன்ற அளவில் குறைக்க வேண்டும். செர்னோபில் மற்றும் ஃபுகுஷிமா அணு மின் நிலைய விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைத் தவிரக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி கெங் சுவான் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வணு மின் நிலையத்தின் பாதுகாப்பு இடர்பாட்டை நீக்கும் வகையில், சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயல்பட்டு, தற்போதைய நிலைமையைத் தணிவுப்படுத்தி, தூதாண்மை மற்றும் அரசியல் வழிமுறையின் மூலம், தொடர்புடைய தரப்புகள் இடையிலான மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.