400-க்கும் அதிகமான போர்களில் அமெரிக்காவின் பங்கு
2022-08-24 17:09:22

அமெரிக்கா நிறுவப்பட்ட 1776ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை 400-க்கும் அதிகமான போர்களில் அந்நாடு ஈடுபட்டுள்ளது.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அந்நாடு கடைசியாக போர் தொடுப்பதாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 1942, போர் தொடுக்கப்பட்ட நாடுகள் பல்கேரியா, ருமேனியா மற்றும் ஹங்கேரி.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பிற நாடுகளில் அமெரிக்கா சராசரியாக அன்றாடும் 46 வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

தற்போது, எந்தப் போரில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினால், எதிலும் இல்லை என்ற ஆச்சரியமான பதிலே கிடைக்கும். அமெரிக்கா, தொடுத்த 400 போர்களில் கால்பங்கு, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளன. ஆனால், போர் என்று அழைப்பதற்கு பதிலாக, ராணுவ நடவடிக்கை, காவல் நடவடிக்கை, மனிதநேய தலையீடு என்ற பெயரில் அவை அழைக்கப்பட்டுள்ளன.