சீன-இந்திய எல்லை பிரச்சினையில் 3ஆவது தரப்பு தலையிடக் கூடாது:சீனா
2022-08-25 18:46:46

அமெரிக்க மற்றும் இந்திய சிறப்பு பிரிவுகள் இமய மலையின் தென்பகுதியில் சுமார் 20 நாட்கள் நீடிக்கும் கூட்டுப் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இது குறித்து சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டன் கே ஃபேய் கூறுகையில், பன்னாடுகளிடையேயான ராணுவப் பயிற்சி, 3ஆவது தரப்புக்கு எதிராக நடைபெறக் கூடாது என்று சீனா சுட்டிக்காட்டி வருகிறது. சீன-இந்திய எல்லை பிரச்சினையில் 3ஆவது தரப்பு எந்த வகையில் தலையிடுவதையும் எதிர்க்கிறோம். இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளையும் தொடர்புடைய உடன்படிக்கைகளையும் இந்தியா பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.