உலகம் புதிய பனிப்போரில் சிக்குவதற்கு அனுமதி அளிக்காது:சீனா
2022-08-25 14:57:48

உக்ரைன் பிரச்சினை குறித்து ஐ.நா. பாதுகாப்பவை ஆகஸ்டு 24ஆம் நாள் நடத்திய கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜுன் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், நடப்பு சகாப்தத்தில் ஒற்றுமை, ஒத்துழைப்பு, சவாலுக்கு எதிரான கூட்டு முயற்சி ஆகியவை அவசியமாகத் தேவைப்படுகிறது. வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கை, பிளவு மற்றும் பகைமையைத் தீவிரமாக்கும் முயற்சி ஆகியன மீது மிகுந்த விழிப்புடன் இருக்கவும், உலகளாவிய நெடுநோக்கு தன்மை வாய்ந்த நிலைத்தன்மையைப் பேணிக்காக்கவும் வேண்டும். உலகம் புதிய பனிப்போரில் சிக்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதை, உக்ரைன் நெருக்கடியும், சர்வதேச சமூகத்தில் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளும் வெளிக்காட்டியுள்ளன என்று குறிப்பிட்டார்.