சீன-தென் கொரிய தூதாண்மை உறவுக்கான விருந்தில் வாங் யீ பங்கேற்பு
2022-08-25 09:58:32

சீன-தென் கொரிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட விருந்தில் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகஸ்டு 24ஆம் நாள் கலந்து கொண்டார்.

வாங் யீ கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக இருநாடுகள் ஒன்றுக்கு ஒன்று அளிக்கும் அரசியல் நம்பிக்கை ஆழமாகி வருகிறது. இருதரப்புறவு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டுறவாக மாறியுள்ளது. அதோடு, இருநாடுகளின் மானுட பண்பாட்டுப் பரிமாற்றமும் சிறப்பாக உள்ளது. கொரிய தீபகற்பத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதில் ஈடுபட்டு வரும் இருதரப்பும், ஐ.நா., ஜி20 அமைப்பு, ஏபெக் உள்ளிட்ட பலதரப்பு கட்டுக்கோப்புகளுக்குள் நெருக்கமான ஒத்துழைப்பை நிலைநிறுத்தி வருகின்றன. கடந்த காலம், தற்காலம் மற்றும் எதிர்காலத்தில் சீனாவும் தென் கொரியாவும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகவும் நல்ல கூட்டாளிகளாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.