சேவைத் துறையில் ஆழ்ந்த அனுபவம் வழங்கும் சிறப்பு கண்காட்சி
2022-08-26 15:15:06

சேவை வர்த்தகத்துக்கான சீனச் சர்வதேசப் பொருட்காட்சியின் பண்பாடு மற்றும் சுற்றுலா சேவைக்கான சிறப்பு கண்காட்சி இணைய வழியாகவும் நேரடியாகவும் நடைபெற உள்ளது. இதில், எண்ணியல் தொழில் நுட்பங்கள் பண்பாடு மற்றும் சுற்றுலாத் தொழில்களுடன் இணைந்து, பார்வையாளர்களுக்கு ஆழ்ந்த சிறப்பான உணர்வுகளை வழங்கும்.

14 ஆயிரத்து 700 சதுர மீட்டர் பரப்பளவுடைய இச்சிறப்பு காட்சியிடத்தில்,பண்பாட்டின் இயக்காற்றல், புத்துணர்வு வாழ்க்கை ஆகிய அம்சங்களிலான 2 பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 500 தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ளப் பதிவு செய்துள்ளன. கலை நிகழ்ச்சி, பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் ஈர்ப்பாற்றலை அனுபவித்தல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.